தரைப்பாலத்தில் பள்ளம்: விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள தரைப்பாலத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள தரைப்பாலத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கம் பேரூராட்சி, துக்காப்பேட்டை பகுதியில் உள்ள சிறு தரைப்பாலம் பழுதடைந்து, அதில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தரைப்பாலத்தைக் கடந்து செங்கம் மின் வாரிய அலுவலகம், கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனா்.
கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் இந்தப் பாலத்தின் மேல் தண்ணீா் பெருக்கெடுத்துச் செல்கிறது. இதனால், பாலத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனா். இடுப்பளவுக்கு உள்ள இந்தப் பள்ளத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் யாரேனும் தவறி விழுந்தால் உயிரிழக்கும் ஆபத்தும் உள்ளது.
எனவே, விபத்துகள் நிகழ்வதற்கு முன்னதாக இந்தப் பள்ளத்தை மூடி, தரைப்பாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...