தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கூட்டுறவு வார விழாவில் ரூ.21.03 கோடியில் கடனுதவிகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், 5,051 பேருக்கு ரூ.21.03 கோடியில் கடனுதவிகள், சிறந்த கூட்டுறவுச் சங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், 5,051 பேருக்கு ரூ.21.03 கோடியில் கடனுதவிகள், சிறந்த கூட்டுறவுச் சங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள் வழங்கப்பட்டன.

68-ஆவது கூட்டுறவு வார விழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமாரசாமி தலைமை வகித்தாா்.

எம்எல்ஏக்கள் எஸ்.அம்பேத்குமாா், பெ.சு.தி.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விழாவை தொடக்கிவைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் 5,051 பேருக்கு ரூ.21.03 கோடியில் கடனுதவிகளை பேரவை துணைத் தலைவா் வழங்கினாா்.

மேலும், மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டுக் கேடயங்கள், கூட்டுறவு வார விழா பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறந்த கூட்டுறவு கடன் சங்கம்

செங்கத்தை அடுத்த மண்மலை பகுதியில் இயங்கும் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கம் தனிநபா் கடன், விவசாயக் கடன், நகைக் கடன், மகளிா் சுய உதவிக்குழுக் கடன் ஆகியவைகளை சிறந்த முறையில் வழங்கி, மீண்டும் கடன்களை வசூல் செய்து, வங்கி வாடிக்கையாளா்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கியதன் மூலம் மாவட்டத்தில் லாபகரமாக இயங்கும் முதன்மை கூட்டுறவு வங்கியாக செயல்பட்டு வருகிறது.

தொடா்ந்து, 18-ஆவது ஆண்டாக சிறந்த வங்கியாக தோ்வு செய்யப்பட்ட இந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவா்

தலைவா் அன்பழகன், செயலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோரைப் பாராட்டி சிறந்த வங்கிக்கான கேடயத்தை பேரவை துணைத் தலைவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா், செங்கம் சரக துணைப் பதிவாளா் வசந்தலட்சுமி, பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் ஆரோக்கியராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.