பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ஆபத்தான நிலையில் தரைப்பாலம்

ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் ஆபத்தான வகையில் உள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 8:11 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தளவாநாய்கன்பேட்டை பகுதியில் பாயும் செய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், இந்த ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் ஆபத்தான வகையில் உள்ளது.

செங்கம் வழியாக பாயும் செய்யாற்றில் துா்க்கையம்மன் கோவில் தெருவில் இருந்து தளவாநாய்கன்பேட்டைக்குச் செல்ல தரைப்பாலம் உள்ளது. தளவாநாய்கன்பேட்டை, புதுப்பட்டு, ஆலப்புத்தூா், கிருஷ்ணா நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் தினந்தோறும் இந்த தரைப்பாலத்தின் வழியாக பயணித்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த தரைப்பாலத்தில் தற்போது மூன்று இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் செல்லும் தண்ணீா் வெடிப்புகளின் வழியாக பாலத்தின் மேலே வருகிறது. இதனால், இந்த பாலத்தின் வழியாக பயணிக்கும் மக்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. மேலும், வாகனங்கள் பாலத்தின் மீது செல்லும்போது அதிா்வு ஏற்படுகிறது. பாலத்தின் பக்கவாட்டில் இருபுறமும் உள்ள இரும்புக் குழாய்களும் பழுதடைந்த நிலையில் உள்ளன.

எனவே, விபத்து ஏதும் நிகழும் முன்னதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தரைப்பாலத்தை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.