தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த ஈரான்!

ஈரான் தூதரகத்தின் எக்ஸ் தளப் பதிவு பற்றி...

ஈரான் கொடியேந்தி ஊர்வலம் சென்ற பெண்கள் - AP

Published On :23 மார்ச் 2026, 3:13 pm IST

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல், ஈரான் போர் கடந்த பிப். 28 முதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில், ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் ஷியா முஸ்லிம்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். மேலும், கமேனி கொல்லப்பட்டதற்கு பல கட்சிகள் இந்தியா முழுவதும் இரங்கல் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, காஷ்மீரில் குழந்தைகள் உள்பட பலரும் ஈரானுக்கு நன்கொடை வழங்கும் காணொளிகளைப் பகிர்ந்த ஈரான் தூதரகம், ”மனிதாபிமானம் மற்றும் ஒற்றுமை உணர்வுடன் ஈரான் மக்களுக்கு துணை நிற்கும் காஷ்மீர் மக்களுக்கு எங்களின் இதயம் நிறைந்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ”உங்களின் கருணையை ஒருபோதும் மறக்கமாட்டோம். நன்றி இந்தியா!” என ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும், ஈரானுக்கு தங்களது உண்டியல் சேமிப்புகளை காஷ்மீர் குழந்தைகள் அனுப்பும் காணொளியையும் பகிர்ந்து அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்திய அரசு ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்களை ஒருமுறை கூட கண்டிக்கவில்லை. ஆனால், வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

இதில் இந்திய எதிர்க் கட்சிகள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க, இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

'Kindness will never be forgotten': Iranian embassy thanks India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.