மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தத்துக்கு இந்தியா வரவேற்பு

Iran | India | US

ஈரான் | இந்தியா | அமெரிக்கா - சித்திரிப்பு

Published On :

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர்நிறுத்தத்தை வரவேற்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே சுமார் 6 வாரங்களாக போர் நீடித்து வந்த நிலையில், இரு நாடுகளுக்குமிடையே இரண்டு வாரங்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அதிகாலையில் அறிவித்தார்.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான இரண்டு வார போர் நிறுத்தத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், "போர் நிறுத்தத்தை வரவேற்கிறோம். இது மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.

நாம் முன்னரே வலியுறுத்தியபடி, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர பதற்றத்தைக் குறைத்தல், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் அவசியம்.

இந்த மோதலால், மக்களுக்கு ஏற்கெனவே பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய எரிசக்தி வழங்கல் மற்றும் வர்த்தக விநியோகத்தையும் சீர்குலைத்துள்ளது.

மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையற்ற கப்பல் வணிகம் மற்றும் உலகளாவிய வர்த்தகமும் மேலோங்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அமெரிக்கா விதித்துள்ள 48 மணிநேர கெடுவுக்குள் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறக்காவிட்டால், புதன்கிழமை காலையில் ஈரானின் ஒட்டுமொத்த நாகரிகமும் அழிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்தது, உலக நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், திடீரென போர் நிறுத்த ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவித்தார்.

Summary

India welcomes US - Iran ceasefire

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.