இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

திடீரென ஈரான் சென்ற பாக். உள்துறை அமைச்சர்! அமெரிக்கா உடன் மீண்டும் அமைதிப்பேச்சு?

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி திடீரென ஈரான் சென்றுள்ளது குறித்து...

Pakistan Interior Minister Mohsin Naqvi.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி... - கோப்புப் படம் | பிடிஐ

Published On :17 மே 2026, 3:16 pm IST

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி திடீரென ஈரான் சென்றுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வந்த நிலையில், தற்காலிகப் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் தலைமையிலான அமைதிப்பேச்சுக்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டன.

ஆனால், பாகிஸ்தான் முன்னிலையில் நடைபெற்ற அமைதிப்பேச்சுக்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால், ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகின்றன.

இதனால், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை முழுமையாக ஈரானிய படைகளால் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நக்வி எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென கடந்த சனிக்கிழமை (மே 16) அன்று ஈரானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதுபற்றி, ஈரானிய மற்றும் பாகிஸ்தானிய ஊடகங்களில் வெளியான செய்தியில், அமைச்சர் நக்வியின் இந்த 2 நாள் அரசு முறைப் பயணம் இருதரப்புக்கும் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் முயற்சியாக இருக்கக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சீனா நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹோர்முஸ் நீரிணை விவகாரம் குறித்து அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்குடன் விவாதம் மேற்கொண்டார்.

அப்போது, ஹோர்முஸ் நீரிணை எந்தவொரு கட்டுப்பாடுமின்றி முழுவதுமாகத் திறக்கப்பட வேண்டுமென சீன அதிபர் ஜின்பிங் வலியுறுத்தினர். இந்தச் சூழலில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் இந்த திடீர் ஈரான் பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Pakistan's Interior Minister, Mohsin Naqvi,'s sudden visit to Iran has garnered international attention.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.