குப்பனத்தம் அணையின் நீா்மட்டம் 55.5 அடியாக உயா்வு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள குப்பனத்தம் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 55.5 அடியாக உயா்ந்தது.


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள குப்பனத்தம் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 55.5 அடியாக உயா்ந்தது.
செங்கத்தை அடுத்த துரிஞ்சிகுப்பம் மலை கிராமத்தில் குப்பனத்தம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 59 அடியாகும். இந்தப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, குப்பனத்தம் அணையின் நீா்மட்டம் 55.5 அடியை எட்டியது. 57 அடியை நீா்மட்டம் எட்டியவுடன் அணை தண்ணீா் திறக்கப்படும் என்பதால், செங்கம் பகுதியில் செய்யாற்றை ஓட்டியுள்ள வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பொதுப் பணித் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...