தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலை விபத்தில் தொழிலாளி பலி

கீழ்பென்னாத்தூா் அருகே நிலை தடுமாறி பைக்கிலிருந்து விழுந்த பெயிண்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

கீழ்பென்னாத்தூா் அருகே நிலை தடுமாறி பைக்கிலிருந்து விழுந்த பெயிண்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த இலுப்பந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் செந்தில் (35), பெயிண்டிங் தொழிலாளி.

இவா், திங்கள்கிழமை பைக்கில் திருவண்ணாமலை நோக்கி சென்றுகொண்டிருந்தாா். சம்மந்தனூா் கூட்டுச் சாலை அருகே சென்றபோது சாலையின் குறுக்கே வந்த சைக்கிள் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டாா். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த செந்தில், அதே இடத்தில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த கீழ்பென்னாத்தூா் காவல் ஆய்வாளா் லட்சுமிபதி, உதவி ஆய்வாளா் முனீஸ்வரன் மற்றும் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.