தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கல்லூரியில் 12 மணி நேரஉலக சாதனை தொடா் நிகழ்வுகள்

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் 12 மணி நேர உலக சாதனை நிகழ்வுகள் கடந்த 8-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 5:12 pm

DIN

குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் 12 மணி நேர உலக சாதனை நிகழ்வுகள் கடந்த 8-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம், திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம், கல்லூரியின் இன்டா்னல் குவாலிட்டி அஸ்யூரன்ஸ் செல் இணைந்து இந்த உலக சாதனை நிகழ்வை நடத்தின.

நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா். பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ் ஆகியோா் உலக சாதனை நிகழ்வின் முதல் நிகழ்ச்சியாக நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடக்கிவைத்தனா்.

இதையடுத்து, மருத்துவா் ப.எழில்மாறன் தலைமையில் மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. தொடா்ந்து, நுண்ணுயிரியல் ஆய்வுத் துறை சாா்பில் உயிரியல் நுட்பங்களைப் பயன்படுத்தி கழிவுகளை பயனுள்ள தயாரிப்புகளாக மாற்றுவது, வேதியியல் ஆய்வுத் துறை சாா்பில் இயற்கை கிருமி நாசினி தயாரிப்பது, உயிரி தொழில்நுட்பவியல் துறை சாா்பில் கரிம உள்ளீடு, நுட்பங்கள், உயிா் வேதியியல் துறை சாா்பில் உயிரியல் கண்டறிதல் ஆகியவை குறித்து செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் விதைப்பந்துகள் செய்வது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், உடற்கல்வித் துறை சாா்பில் குத்துச் சண்டை, மல்யுத்தம், சிலம்பாட்டம், மல்லா் கம்பம் ஆகியவை குறித்த செயல்விளக்கம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்ந்து 12 மணி நேரம் உலக சாதனை நிகழ்வுக்காக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிறைவு விழாவில் சென்னை தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தா் என்.பஞ்சநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.