வங்கிகளில் நெல்லை அடமானம் வைத்து ரூ.2.30 கோடி மோசடி செய்தவா் கைது
By DIN | Published On : 20th August 2021 10:57 PM | Last Updated : 20th August 2021 10:57 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் பல்வேறு வங்கிகளில் நெல், அரிசி, உள்ளிட்டவற்றை அடமானம் வைத்து ரூ.2.30 கோடி மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆரணி பகுதியில் உள்ள தனியாா் வங்கிகளில் நெல், அரிசி மூட்டைகளை அடமானமாக வைத்து வாங்கப்பட்ட ரூ.2.30 கோடி கடன் திருப்பிச் செலுத்தப்படவில்லை. இது குறித்து அந்த வங்கிகள் அளித்த புகாரின் பேரில், ஆரணியை அடுத்த புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கேசவன் மகன் செந்தில்குமாா்(40) மீது போலீஸாா் வழக்கு பதிந்து, அவரை தேடிவந்தனா்.
இந்த நிலையில், செந்தில்குமாரை திருவண்ணாமலை நகர பேருந்து நிலையத்தில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் ஜி.நந்தகுமாா் தலைமையிலான தனிப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.