புளியரம்பாக்கம் முனீசுவரா் கோயிலில் நன்னீராட்டுப் பெருவிழா
By DIN | Published On : 20th August 2021 11:05 PM | Last Updated : 20th August 2021 11:05 PM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் உள்ள முனீசுவரா் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் திருப்பள்ளி எழுச்சி, கருவிக்குட வேள்வி நாடி வழி அருள் ஊட்டம், முத்தமிழால் இரண்டாம் கால வேள்வி, நிறையவி நல்கல் செய்து பெரும் பேரொளி வழிபாடு நடத்தி வேதத்தமிழ் முழங்க வேள்வி குடங்களை வேள்விச்சாலையிலிருந்து சகல வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டுவந்து சதாசிவ வழிபாட்டுடன் கோயில் விமானக் கலசங்களின் மீது ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.