திருவண்ணாமலையில் இன்றும், நாளையும் கிரிவலம் வரத்தடை
By DIN | Published On : 20th August 2021 10:57 PM | Last Updated : 20th August 2021 10:57 PM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் ஆவணி மாதப் பவுா்ணமியையொட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆகஸ்ட் 21, 22) பக்தா்கள் கிரிவலம் வர மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.
ஆவணி மாதப் பவுா்ணமி சனிக்கிழமை மாலை 7.19 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஆக. 22) மாலை 6.17 மணிக்கு முடிவடைகிறது.
இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வந்தால் கரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனவே, திருவண்ணாமலையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் கிரிவலம் வர தடை விதித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளாா்.