மனு நீதி நாள் முகாம்
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

வெம்பாக்கம் வட்டம், திருப்பனமூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மனு நீதி நாள் முகாமில் 155 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் டி.ராஜீ தலைமை வகித்தாா். வெம்பாக்கம் வட்டாட்சியா் சத்தியன் முன்னிலை வகித்தாா். சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியா் ஜெயவேல் வரவேற்றாா். திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிட நலத் துறை அலுவலா் கீதாலட்சுமி பங்கேற்று 155 பேருக்கு ரூ. 87.61 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கிச் சிறப்புரையாற்றினாா்.
முகாமில் 160 மனுக்கள் பெறப்பட்டு, 116 மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டன. 25 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 19 மனுக்கள் பரீசிலனையில் உள்ளது.
நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரணிதரன், கோபாலகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலா் தேவராஜ், வருவாய் ஆய்வாளா் உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.