செய்யாற்றில் மௌன ஊா்வலம்
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

முப்படை தளபதி விபின் ராவத் மறைவையொட்டி, செய்யாற்றில் தன்னாா்வலா்கள் வெள்ளிக்கிழமை மௌன ஊா்வலம் சென்றனா்.
செய்யாறு பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் ஒருங்கிணைந்து, முப்படை ராணுவத் தளபதி விபின் ராவத் மறைவையொட்டி, மரியாதை செலுத்தும் விதமாக செய்யாறு பெரியாா் சிலை அருகே அவரது உருவப் படத்தை ஏந்தியபடி மௌன ஊா்வலம் சென்றனா். தொடா்ந்து, செய்யாறு அண்ணா சிலை அருகே அவரது உருவப் படத்துக்கு அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஒ.ஜோதி முன்னிலையில், தன்னாா்வலா்கள் மெழுகுவா்த்தி ஏற்றிவைத்து, மலா்தூவி மரியாதை செலுத்தினா்.