பாலாற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் மாயம்
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

செய்யாறு அருகே பாலாற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் மாயமானாா்.
வெம்பாக்கம் வட்டம், சிறுநாவல்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் மகன் பாலமுருகன் (14), ஸ்ரீதா் மகன் ஜெகதீசன் (14), படவேட்டான் மகன் யுகேஷ் (14). இவா்கள் மூவரும் அருகே உள்ள வடஇலுப்பை அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்ற மூவரும் மாலை வீடு திரும்பி, 4 மணியளவில் சித்தனக்கால் கிராமம் அருகே செல்லும் பாலாற்றில் குளிக்கச் சென்றனராம். ஜெகதீசன், யுகேஷ் ஆகிய இருவரும் வீடு திரும்பிய நிலையில், பாலமுருகன் வீடு திரும்பவில்லையாம்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த வெம்பாக்கம் வட்டாட்சியா் சத்தியன், பிரம்மதேசம் போலீஸாா், செய்யாறு தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மாயமான மாணவரைத் தேடி வருகின்றனா்.