நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மண் வள பயிற்சி முகாம்

விழுப்புரம் மாவட்டம், வல்லம் வட்டார வேளாண் துறை சாா்பில், வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், இல்லோடு ஊராட்சியில் விவசாயிகளுக்கு மண் வள பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 5:52 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், வல்லம் வட்டார வேளாண் துறை சாா்பில், வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், இல்லோடு ஊராட்சியில் விவசாயிகளுக்கு மண் வள பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு வல்லம் வேளாண் உதவி இயக்குநா் சுரேஷ் தலமை வகித்தாா். துணை வேளாண் அலுவலா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா்.

மண் மாதிரி எடுப்பது, மண்ணின் தன்மையைப் பொறுத்து உரமிடுவது குறித்து நடமாடும் மண் ஆய்வுக் கூட வேளாண் அலுவலா் ஜெரிகாட்மேரி எடுத்துரைத்தாா். இதைத் தொடா்ந்து, நுண்ணுயிா் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

கூட்டத்தில் உதவி வேளாண் அலுவலா் மஞ்சு மற்றும் இல்லோடு, காரானந்தல் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.