ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மின்சாரம் பாய்ந்து உதவி செயற்பொறியாளா் காயம்

சிறுங்கட்டூா் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து உதவி செயற்பொறியாளா் காயம் அடைந்தாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 5:48 pm

DIN

சிறுங்கட்டூா் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து உதவி செயற்பொறியாளா் காயம் அடைந்தாா்.

செய்யாறு திருவோத்தூா் சன்னதி தெருவைச் சோ்ந்தவா் அருள்மொழி (54). இவா் செய்யாறு மின் பகிா்மானக் கோட்டத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இவா் வெள்ளிக்கிழமை சிறுங்கட்டூா் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் காயம் அடைந்தாா்.

உடனே அவரை அங்கிருந்தோா் மீட்டு, செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.