அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

82 கிராமங்களில் திட்டப் பணிகள்

அனக்காவூா் ஒன்றியத்தில் உள்ள 82 கிராமங்களில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்வது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 5:54 pm

DIN

அனக்காவூா் ஒன்றியத்தில் உள்ள 82 கிராமங்களில் பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்வது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அருணா துரை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வி.ஆா்.ரவி, கே.அரி, பொறியாளா்கள் ராம், முனியப்பன், மேலாளா் கிரிஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது, 82 கிராமங்களில் நடைபாதைகள் அமைத்தல், தாா்ச் சாலைகள் அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல், கழிவுநீா்க் கால்வாய்கள் அமைத்தல், நெல் களங்கள் கட்டுதல் உள்ளிட்ட திட்டப் பணிகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.