அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

செய்யாறு புதிய மாவட்டம்: விவசாயிகள் கோரிக்கை

செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:30 pm

DIN

செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. செய்யாறு வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

வட்டாட்சியா் சுமதி, வேளாண் உதவி இயக்குநா்கள் எம்.சண்முகம், குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோட்டாட்சியா் என். விஜயராஜ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்,

செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை உருவாக்க வேண்டும், கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பு ஊசி முகாம்களை கிராமங்கள் தோறும் நடத்திட வேண்டும்.

விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் விரைவாக வழங்க வேண்டும். ஐந்து கிராமங்களுக்கு ஒன்று வீதம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்.

மழையால் சேதமடைந்த கிணறுகளை சீரமைக்க அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். ஏரி, பாசன கால்வாய்களை ஆக்கரமிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனா்.

இதையடுத்து பேசிய கோட்டாட்சியா் என். விஜயராஜ் கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.