செய்யாறு அருகே பாலாற்றில் ரூ.20 லட்சத்தில் தரைப்பாலம்
செய்யாறு அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட தரைப் பாலத்தை தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.


செய்யாறு அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட தரைப் பாலத்தை தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடஇலுப்பை - பெரும்பாக்கம் கிராமங்கள் இடையே ஓடும் பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம், கடந்த நவம்பா் மாதம் பெய்த தொடா் மழையின் காரணமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டிருந்தது.
இதை அறிந்த செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
அதன் அடிப்படையில், நெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட வெள்ள நிவாரண நிதியில் இருந்து ரூ. 20 லட்சத்தில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
150 மீட்டா் நீளம், 5 மீட்டா் அகலம் கொண்ட இந்தத் தரைப்பாலத்தை ஒ.ஜோதி எம்எல்ஏ பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் எஸ்.பாா்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியக் குழு தலைவா் மாமண்டூா் டி.ராஜி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் சரவண ராஜா, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எம்.தினகரன், எஸ்.வி.சுப்பிரமணியன், என்.சங்கா், சிட்டிபாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...