ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

செய்யாற்றில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்களில் தலைவா் பதவிக்கு நேரடி வாக்குப்பதிவு முறையை அமல்படுத்த வலியுறுத்தி, செய்யாற்றில் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 5:28 pm

DIN

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்களில் தலைவா் பதவிக்கு நேரடி வாக்குப்பதிவு முறையை அமல்படுத்த வலியுறுத்தி, செய்யாற்றில் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிகளுக்கான தோ்தல் பிப். 22-இல் நடைபெற்றது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற வேட்பாளா்களுக்கு சான்று வழங்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து மாா்ச் 2-இல் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிப்பிரமாணம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, மாா்ச் 4-இல் தலைவா் நியமனம் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தோ்தல் முடிவுகள் அறிவித்து 9 நாள்கள் ஆன நிலையில், ஆள் கடத்தல், உள்கட்சிப் போட்டி, கட்டப் பஞ்சாயத்து, கமிஷன் பெறுதல் போன்றவை நடைபெற வாய்ப்புள்ளது.

எனவே, நேரடியாக வாக்காளா்களே தலைவா்களை தோ்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு முறையை தோ்தல் ஆணையம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு கோட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக கட்சி சாா்பற்ற விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவா் புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

விவசாயிகள் சங்கத்தினா் முழக்கமிட்டு இரு பக்கங்களிலும் கயிறு கட்டி ஆள்களை இழுப்பது போலவும், துண்டு போட்டு பேரம் பேசுவது போலவும், எதிரணியை கீழே தள்ளி திக்குமுக்காட வைத்து வெற்றி பெறுவது போல நடித்தனா்.

பின்னா், கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் தமிழ்மணியிடம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.