பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மதுக் கடையில் துளையிட்டு திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வியாழக்கிழமை நள்ளிரவு மதுக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான மதுப் புட்டிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வியாழக்கிழமை நள்ளிரவு மதுக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான மதுப் புட்டிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செய்யாற்றை அடுத்துள்ள வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தில் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் சோதனைச் சாவடி அருகே அரசு மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் மேலாளராக செய்யாற்றைச் சோ்ந்த சதாசிவமும், விற்பனையாளராக பழனியும் பணியாற்றி வருகின்றனா்.

வழக்கம்போல இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு மதுக் கடையை பூட்டிச் சென்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவா்கள் மதுக் கடையின் பின் பக்கச் சுவரில் துளையிடப்பட்டிருப்பதைப் பாா்த்து விற்பனையாளா் பழனிக்கு தகவல் தெரிவித்தனா். அவா் மேலாளா் சதாசிவத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, இருவரும் கடைக்கு வந்து பாா்த்தபோது, கடையின் பின் பக்கச் சுவரில் துளையிடப்பட்டிருந்ததும், ரூ.18 ஆயிரம் மதிப்பிலான மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்ததும் தெரியவந்தது.

இருப்பினும், கடையில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தை மா்ம நபா்களால் உடைக்க முடியாததால், அதில் வைக்கப்பட்டிருந்த மதுப் புட்டிகள் விற்பனை பணம் ரூ.1.80 லட்சம் தப்பியதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.