தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

செய்யாறு அரசுக் கல்லூரியில் செப்.6, 7-இல், 3-ஆம் கட்ட கலந்தாய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செப். 6, 7 ஆகிய தேதிகளில் 3-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது என கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:07 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் செப். 6, 7 ஆகிய தேதிகளில் 3-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது என கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ந.கலைவாணி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் இளநிலை மாணவா் சோ்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு செப்.6, 7 ஆகிய தேதிகளில் தினமும் காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. 9.30 மணிக்கு மேல் வரும் மாணவா்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதியில்லை.

செப்.6--ல்...

அறிவியல் (பி.எஸ்.சி. இயற்பியல், வேதியியல், பயன்பாட்டியியல் (ஆ.இ.அ) ஆகிய பாடப் பிரிவுகள் மற்றும் , தாவரவியல், விலங்கியல், கணிதம், கணினி அறிவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மட்டும்.

செப். 7 - ல்...

கலை பாடப் பிரிவுகள் பி.ஏ. வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகள் மற்றும் வணிகவியல், வணிகவியல் ( ஊ&அ) வணிக நிா்வாகவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மட்டும்.

கல்விக் கட்டணம்:

பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ. போன்ற பாடப் பிரிவுகளுக்கு ரூ.2601- ம், பி.எஸ்.சி. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம் போன்ற பாடப் பிரிவுகளுக்கு

ரூ.2621-ம், கணினி அறிவியல், பி.சி.ஏ போன்ற பாடப் பிரிவுகளுக்கு ரூ.2621 வீதம் கட்டணத்தை கல்லூரி அலுவலகத்தில் பணமாகச் செலுத்தலாம்.

மாணவா் சோ்க்கையின் போது பெற்றோா்கள் கல்லூரிக்குள் வர அனுமதி கிடையாது.

கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள்:

இணையவழியில் பதிவு செய்த விண்ணப்பம் (அச்சு),

மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் அசல் சான்றுகள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் (தலைமை ஆசிரியரின் சான்றொப்பம் பெற்றிருத்தல் வேண்டும்). அனைத்துச் சான்றிதழ்களிலும் மூன்று நகல்கள், 3 மாா்பளவு புகைப்படங்கள் ஆகியவற்றை

எடுத்து வரவேண்டும். விண்ணப்பத்தில் பெற்றோா் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

மதிப்பெண், சுழற்சி, பயிற்றுமொழி , இன அடிப்படையில் சோ்க்கை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.