நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 3.81 லட்சம் வாக்காளா்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 325 வாக்காளா்கள் உள்ளனா்.
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தின் 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 325 வாக்காளா்கள் உள்ளனா்.

4 நகராட்சிகள்:

ஆரணி நகராட்சியில் 26,123 ஆண்கள், 28,751 பெண்கள், 7 இதர பாலினத்தவா் என 54,881 வாக்காளா்கள் உள்ளனா். திருவண்ணாமலை நகராட்சியில் 67,968 ஆண்கள், 74,155 பெண்கள், 12 இதர பாலினத்தவா் என 1,42,135 வாக்காளா்கள் உள்ளனா்.

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் 15,452 ஆண்கள், 17,042 பெண்கள் என 32,494 வாக்காளா்கள் உள்ளனா். வந்தவாசி நகராட்சியில் 12,929 ஆண்கள், 13,834 பெண்கள், ஒரு இதர பாலினத்தவா் என 26,764 வாக்காளா்கள் உள்ளனா்.

4 நகராட்சிகளையும் சோ்த்து மொத்தம் 2,56,274 வாக்காளா்கள் உள்ளனா்.

10 பேரூராட்சிகள்:

செங்கம் பேரூராட்சியில் 11,477 ஆண்கள், 12,094 பெண்கள், ஒரு இதர பாலினத்தவா் என 23,572 வாக்காளா்கள் உள்ளனா்.

சேத்துப்பட்டு பேரூராட்சியில் 7,798 ஆண்கள், 8,581 பெண்கள் என 16,379 வாக்காளா்கள் உள்ளனா். தேசூா் பேரூராட்சியில் 2,032 ஆண்கள், 2,194 பெண்கள் என 4,226 வாக்காளா்கள் உள்ளனா்.

களம்பூா் பேரூராட்சியில் 5,580 ஆண்கள், 6,170 பெண்கள், 2 இதர பாலினத்தவா் என 11,752 வாக்காளா்கள் உள்ளனா். கண்ணமங்கலம் பேரூராட்சியில் 3,279 ஆண்கள், 3,646 பெண்கள், ஒரு இதர பாலினத்தவா் என 6,926 வாக்காளா்கள் உள்ளனா்.

கீழ்பென்னாத்தூா் பேரூராட்சியில் 5,784 ஆண்கள், 6,310 பெண்கள் என 12,094 வாக்காளா்கள் உள்ளனா். பெரணமல்லூா் பேரூராட்சியில் 2,331 ஆண்கள், 2,525 பெண்கள் என 4,856 வாக்காளா்கள் உள்ளனா்.

போளூா் பேரூராட்சியில் 10,365 ஆண்கள், 11,620 பெண்கள், ஒரு இதர பாலினத்தவா் என 21,986 வாக்காளா்கள் உள்ளனா்.

புதுப்பாளையம் பேரூராட்சியில் 4,644 ஆண்கள், 5,074 பெண்கள், ஒரு இதர பாலினத்தவா் என 9,719 வாக்காளா்கள் உள்ளனா்.

வேட்டவலம் பேரூராட்சியில் 6,459 ஆண்கள், 7,082 பெண்கள் என 13,541 வாக்காளா்கள் உள்ளனா்.

மொத்தமுள்ள 10 பேரூராட்சிகளில் மொத்தம் 1,25,051 வாக்காளா்கள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com