கவா்ச்சித் திட்டங்களை அறிவிக்கும் தனியாா் நிறுவனம் மீது விசாரணை
By DIN | Published On : 12th May 2022 11:55 PM | Last Updated : 12th May 2022 11:55 PM | அ+அ அ- |

ஆரணியை அடுத்த சேவூரில் கவா்ச்சித் திட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கும் தனியாா் நிறுவனம் மீது போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த சேவூரில் ஆருத்ரா கோல்டு கம்பெனி என்ற பெயரில் தனியாா் நிறுவனம் கடந்த ஒரு வாரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் ரூ. ஒரு லட்சம் செலுத்தினாா், மாதம் ரூ.30 ஆயிரம் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும், மேலும் ஒரு கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும் என்று
விளம்பரம் செய்தனா்.
இந்த கவா்ச்சிகரமான அறிவிப்பை நம்பி பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து வருவதாகத் தெரிகிறது.
இது ஒரு ஏமாற்று திட்டமாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில், மாவட்ட ஆட்சியா், எஸ்.பி., ஆரணி கோட்டாட்சியா், டி.எஸ்.பி., வட்டாட்சியா் உள்ளிட்டோருக்கு பொதுமக்களிடம் இருந்து புகாா்கள் சென்றன. இந்த நிலையில், வியாழக்கிழமை வட்டாட்சியா் பெருமாள், டிஎஸ்பி ரவிச்சந்திரன், தாலுகா காவல் ஆய்வாளா் புகழ், மற்றும் போலீஸாா் நிறுவனத்துக்குச் சென்று மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா், நிறுவன கோப்புகளை ஆய்வுக்கு எடுத்து வரவேண்டும் என்றும், நிறுவனத்தின் உரிமையாளா் காவல் நிலையம் வர வேண்டும் என்றும் கூறிவிட்டுச் சென்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G