அனக்காவூா் ஒன்றியம், நெல்வாய் கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், ரூ.22.65 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், ரூ.10.19 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் ஆகியவை வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
இதற்கான நிகழ்வில் அனக்காவூா் ஒன்றியத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று புதிய கட்டடங்களைத் திறந்துவைத்து
பொதுமக்கள், குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் டி.ராஜூ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.