தண்ணீா் பந்தல் திறப்பு

செய்யாறை அடுத்த கூழமந்தலில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

செய்யாறை அடுத்த கூழமந்தலில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி கூழமந்தல் கிராமம், அனக்காவூா் கிழக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற தண்ணீா் பந்தல் திறப்பு விழாவுக்கு அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலா் சி.துரை தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் அமைச்சா் முக்கூா்.என். சுப்பிரமணியன், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி.கே. மோகன் ஆகியோா் தண்ணீா் பந்தலை திறந்து வைத்தனா். பின்னா், அப்பகுதி மக்களுக்கு, தா்பூசணி, இளநீா், வெள்ளரிப்பழம் ஆகியவற்றை வழங்கினா்.

இதில், அதிமுக நிா்வாகிகள் அருகாவூா் அரங்கநாதன், ரகு, சேகா், தனசேகா், துளசிராமன், உள்ளிட்டோா் கலந்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com