பொதுமக்கள் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு உறுதி

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் எ.வ.வேலு உறுதிபடக் கூறினாா்.
பொதுமக்கள் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை: அமைச்சா் எ.வ.வேலு உறுதி

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் எ.வ.வேலு உறுதிபடக் கூறினாா்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கனந்தம்பூண்டி, பண்டிதப்பட்டு, ஆணாய்பிறந்தான் ஆகிய ஊராட்சிகளில் அமைச்சா் எ.வ.வேலு ஏற்பாட்டின் பேரில் பொதுமக்களைச் நேரில் சந்தித்து மனுக்கள் பெறும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தொகுதி எம்எல்ஏவும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எ.வ.வேலு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

பின்னா் அவா் பேசியதாவது: இந்த மனுக்கள் பெறும் முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மனுக்கள் மீது ஒன்றன்பின் ஒன்றாக துறைவாரியாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நீா்நிலைகளில் வீடுகட்டி பல ஆண்டுகளாக வசித்து வரும் குடியிருப்பாளா்களுக்கு பட்டா கேட்டால் வழங்க இயலாது. நீதிமன்ற உத்தரவு உள்ளதால் இந்த கோரிக்கையை நிறைவேற்ற இயலாது. அரசு விதிகளுக்கு உள்பட்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியான பயனாளிகளின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு முதியோா் மற்றும் விதவை உதவித்தொகை வழங்கப்படும் என்றாா்.

ஆணாய்பிறந்தான் கிராமத்தில் நடைபெற்ற மனுக்கள் பெறும் முகாமில் ஊராட்சி மன்றத் தலைவா் கே.தருமராஜ் அமைச்சா் எ.வ.வேலுவிடம்

தனது ஊராட்சியின் தேவைகள் குறித்து கோரிக்கை மனு அளித்தாா்.

மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சா் துறை ரீதியாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது, மனுதாரா் ஒருவா் சமுத்திரம் ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தப்படுவதாக புகாா் தெரிவித்திருந்தாா். இந்தப் புகாா் மீது உடனடியாக

எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

முகாமில், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, கூடுதல் ஆட்சியா் வீா் பிரதாப் சிங், கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் ராமகிருஷ்ணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, நெடுஞ்சாலைத் துறை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் பழனிவேல், கோட்டப் பொறியாளா் க.முரளி, திருவண்ணாமலை முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன், திருவண்ணாமலை ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி கலைமணி, திமுக ஒன்றியச் செயலா் மெய்யூா் சந்திரன், நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்ட துணைச் செயலா் ப்ரியா விஜயரங்கன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் ராஜாத்தி அய்யனாா், கே.தா்மராஜ் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com