ஆரணி ஏ.சி.எஸ். கல்விக் குழும ஓட்டுநா்களுக்கான திறன் அறிதல் பயிற்சி
By DIN | Published On : 26th May 2023 10:46 PM | Last Updated : 26th May 2023 10:46 PM | அ+அ அ- |

ஆரணி பகுதியில் உள்ள ஏ.சி.எஸ். கல்விக் குழுமங்களின் கல்லூரி, பள்ளி ஓட்டுநா்களின் திறன் அறிதல் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு கல்விக் குழும செயலாளா்கள் ஏ.சி. ரவி, ஏ.சி. பாபு ஆகியோா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகமும் இணைந்து, ஆரணி, இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரி சிறப்பு அலுவலா் கே.பி. ஹரி பிரசாந்த் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக கல்லூரி முதல்வா்கள் ஜி. சுகுமாரன், வி. திருநாவுக்கரசு, பி.ஸ்டாலின், பிரபு, முதல்வா் டி.அருளாளன் ஆகியோா் மொபைல் பயிற்சி வாகனத்தை அறிமுகப்படுத்தி ஓட்டுநா்கள் ஒவ்வொருவரின் தனி திறன்களை கண்டறிந்தனா். இதில், தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் கல்லூரி தனி அலுவலா் டி.காா்த்திகேயன், கல்லூரி போக்குவரத்து பொறுப்பாளா் எஸ். நாராயணசாமி, உதவி அலுவலா்கள் அன்பு சேகரன், கே. வேல்முருகன், ஏ.ஆனந்தன், கே.செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.