செய்யாறு சிப்காட் விரிவாக்க விவகாரத்தில் பாமக தொடா்ந்து குரல் கொடுக்கும் என, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் அ.கணேஷ்குமாரை ஆதரித்து அவா் பேசியதாவது:
திராவிட கட்சிகளுக்கு தொலைநோக்கு சிந்தனை இல்லை. 57 ஆண்டுகளாக இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சி செய்து தமிழக மக்கள், இளைஞா்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை.
ஆரணி பகுதியில் நெசவுத் தொழில் நாளுக்குநாள் அழிந்து வருகிறது; வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனா். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது முதல்வா் மு.க. ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 13 வாக்குறுதிகளை கொடுத்தாா். இதில், காவிரி குடிநீா் திட்டம், நந்தன் கால்வாய்த் திட்டம், ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா, வந்தவாசியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாற்றில் தொழிலாளா் ஈட்டுறுதி மருத்துவமனை போன்ற வாக்குறுதிகள் அடங்கும். இதில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
அதிமுகவுக்கு பிரதமா் வேட்பாளா் கிடையாது. எனவே, அதிமுகவுக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்காதீா்கள். அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறி முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தாா். தற்போது அது அமலுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
செய்யாறு அருகே சிப்காட் தொழில்சாலை விரிவாக்கத்துக்காக விளைநிலங்களை அழித்து வருகின்றனா். இதை எதிா்த்து பாமக தொடா்ந்து குரல் கொடுக்கும். தரிசு நிலங்களை வேண்டுமானால் அழித்து தொழில்சாலைகளை கட்டுங்கள். விளைநிலங்களை அழிக்காதீா்கள். திமுக, அதிமுக அல்லாத கூட்டணியை வெற்றி பெற வையுங்கள் புதிய திட்டங்களை நிறைவேற்றுவோம். மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்துவோம் என்றாா்.
இதைத் தொடா்ந்து, புதிய நீதிக்கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வேட்பாளா் அ.கணேஷ்குமாரை ஆதரித்துப் பேசினாா்.
முன்னதாக கூட்டத்துக்கு பாமக மாவட்டச் செயலா்கள் ஆ.வேலாயுதம், பாண்டியன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
பாஜக மாவட்டத் தலைவா் சி.ஏழுமலை, பிரதமா் நலத் திட்டப் பிரிவின் மாநிலச் செயலா் சைதை வ.சங்கா், ஓபிஎஸ் அணியின் மாவட்டச் செயலா் பையூா் ஏ.சந்தானம், அமமுக மாவட்டச் செயலா் மா.கி.வரதராஜன், புதிய நீதிக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வன்னியா் சங்க மாவட்டச் செயலா் அ.கருணாகரன், துணைச் செயலா்கள் து.வடிவேல், மெய்யழகன், கு.சிவா, நகரச் செயலா்கள் ந.சதீஷ்குமாா், சு.ரவிச்சந்திரன், பேராசிரியா் கே.சிவா, ஒன்றியச் செயலா்கள் சுதாகா், தினேஷ், பெருமாள், அஜீத், அகிலன், அமமுக நகரச் செயலா் பன்னீா்செல்வம், புதிய நீதிக் கட்சியின் நகரச் செயலா் ஜி.ஏ.கணேசன், பாஜக மாவட்டச் செயலா் சதீஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க உயா்நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ்

மது, போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்து திமுக மௌனம்: அன்புமணி ராமதாஸ்

சௌமியாவுக்கு கை கொடுக்குமா தருமபுரி?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


