தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அவர், காங்கிரஸ் தலைமை இதனை ஆதரிப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பையடுத்து திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள், வேட்பாளர்கள் பட்டியல் உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இதனிடையே தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினார்.
தொடர்ந்து காங்கிரஸ் தலைமைக்கு இதுகுறித்து கடிதமும் அளித்திருந்தார்.
தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மீது அவர் கடும் அதிருப்தியை முன்வைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியும் அவரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹசினா சையத், ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
"காங்கிரஸ் கட்சியின் மீதான என்னுடைய காதல் ஒருதலைப்பட்சமானதாகவே அமைந்துவிட்டது.
சமீபத்தில் நடைபெறும் தேர்தல்களில் எனக்குப் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று மத்திய தேர்தல் குழுவும் நீங்களும் வலியுறுத்திய போதிலும், எனக்குப் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அவமானப்படுத்தப்பட்டேன். இது என்னை தனிப்பட்ட முறையில் காயப்படுத்தியது மட்டுமல்லாமல், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி மற்றும் நீங்கள்(ராகுல்) ஆகியோர் கண்ட கனவான 'பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு' என்பது வெறும் வாய்மொழிப் பேச்சாகவே சுருங்கிவிட்டது. ஏனெனில், என்னைப் போன்ற தகுதியுள்ள ஒரு பெண்ணுக்கும் தமிழ்நாடு மகிளா காங்கிரஸைச் சேர்ந்த மேலும் சிலருக்கும் தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. தமிழ்நாடு மகிளா காங்கிரஸில் இருந்து எங்களுக்கு ஒரு இடம்கூட ஒதுக்கப்படவில்லை.
ஒரு மகிளா காங்கிரஸ் தலைவராக, கட்சியின் தலைமை எனக்கு அநீதி இழைத்துவிட்டதாக நான் உணர்கிறேன். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் நான் இதுகுறித்து முறையிட்டேன். ஆனால் வழக்கம் போலவே, எனது முயற்சிகள் அனைத்தும் வீணாயின. அவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான ஊழல் நிறைந்த அமைப்பையும், அத்துடன் காங்கிரஸ் கமிட்டி செயலாளரும் தற்போதைய ஜார்கண்ட் மாநிலப் பொறுப்பாளருமான ஸ்ரீவெல்ல பிரசாத், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, வெளிநாடு வாழ் காங்கிரஸ் பிரிவைச் சேர்ந்த சாம் பிட்ரோடாவுடன் தொடர்புடைய புஷ்பராஜ், தற்போதைய தமிழ்நாடு பொறுப்பாளர்களான கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா ஆகியோரின் மோசமான நோக்கங்களை ஆதரித்துள்ளார்.
மாணவர் காங்கிரஸ் காலத்தில் தொடங்கி கடந்த மூன்று தசாப்தங்களாக நமது கட்சிக்காக நான் அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்து வந்த நிலையில் எனது கண்ணியமும் சுயமரியாதையும் களங்கப்படுத்தப்பட்டுவிட்டதாக உணர்கிறேன். எனக்கே நீதி மறுக்கப்படும் ஒரு பதவியில், எனது கீழ் பணிபுரியும் நிர்வாகிகளுக்குப் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு உரிமைகளை என்னால் எவ்வாறு பெற்றுத் தர இயலும்? எனவே, தமிழ்நாடு மகிளா காங்கிரஸின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நான் விலகுகிறேன். இருப்பினும், நமது கட்சியையும் குடும்பத்தினரையும் நான் என்றென்றும் தொடர்ந்து நேசிப்பேன்.
எனது ஒரே கேள்வி என்னவென்றால், காங்கிரஸ் தலைவர் போன்ற ஒரு மூத்த தலைவரின் ஊழல் நிறைந்த நிர்வாக அமைப்பை ஆதரித்ததன் காரணமாகவே, உண்மையான தொண்டர்கள் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாக அமைப்பு சீர்செய்யவே முடியாத அளவிற்குச் சீர்குலைந்துவிட்டது. இது கட்சிக்குப் பேரிழப்பாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Tamil Nadu Mahila Congress President Hazeena syed Resigns
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக குறித்து ஜோதிடம் சொல்ல முடியாது! - ஜோதிமணி எம். பி. சிறப்பு நேர்காணல்
காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்!

தமிழ்நாடு பாஜக நிர்வாகி முரளீதரன் கட்சியிலிருந்து நீக்கம்!

தொகுதி மாறுவதாக நான் கூறவில்லை: செல்வப்பெருந்தகை
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

