மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் மின்சார வாரிய கட்டுப்பாட்டு மையத்தை 94987 94987 | 1912 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் - தமிழக அரசு சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

துரோகம், முதுகில் குத்துதல்... திமுக தீர்மானத்திற்கு காங்கிரஸ் கண்டனம்!

திமுக இளைஞரணி வெளியிட்ட தீர்மானத்திற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

News image

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் / காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் ராஜேஷ் குமார் - X

Updated On :23 மே 2026, 8:36 pm IST

திமுக இளைஞரணி வெளியிட்ட தீர்மானத்திற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற நிலையில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை அவர்கள் பெறவில்லை. இந்த நிலையில், திமுக கூட்டணியில் 5 இடங்களில் வென்ற காங்கிரஸ், திமுக தலைமையுடன் ஆலோசனை செய்யாமல் உடனடியாக தவெகவுடன் இணைந்தது.

மேலும், காங்கிரஸ் தேசியத் தலைவர் ராகுல் காந்தியும் அரசியல் மாண்பைப் பேணும் விதத்தில் கூட திமுகவுக்கு எந்த வாழ்த்தோ ஆறுதல் பதிவோ வெளியிடவில்லை. பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவளித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடு திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, இன்று திமுக இளைஞரணி நடத்திய கூட்டத்தில் கட்சி சார்ந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றாக ’முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம்’ என்று தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர். இது, தமிழக காங்கிரஸ் வட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட கண்டன அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், பயன்படுத்தப்பட்ட சில கருத்துகளும் கடும் கண்டனத்திற்குரியவை.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எப்போதும் மதச்சார்பற்ற கொள்கைகள், ஜனநாயக மதிப்புகள் மற்றும் கூட்டணி தர்மத்தை மதித்து செயல்பட்டு வருகிறது. தமிழக அரசியலில் பல்வேறு ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்ட வரலாற்றை யாராலும் மறுக்க முடியாது.

கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயக அரசியலில் இயல்பான ஒன்று. ஆனால் அதனை தேவையற்ற வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் மூலம் வெளிப்படுத்துவது அரசியல் நாகரிகத்திற்கு ஏற்றதல்ல.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மீது முன்வைக்கப்பட்டுள்ள “துரோகம்”, “முதுகில் குத்துதல்” போன்ற குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முழுமையாக நிராகரிக்கிறது. காங்கிரஸ் கட்சி எப்போதும் கொள்கை அடிப்படையிலான அரசியலையே முன்னிறுத்தி வருகிறது.

அரசியலில் பரஸ்பர மரியாதையும், பண்பும் நிலைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. எனவே இத்தகைய கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள் கடும் கண்டனத்திற்குரியவை என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் ராஜேஷ் குமார் இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில், “திமுக இளைஞர் அணிக் கூட்டத்தில் காங்கிரஸ் ஒழிக , விசிக ஒழிக என்று முழக்கங்களை எழுப்பியதோடு, தலைவர் ராகுல் காந்தியையும் விமரிசனம் செய்து கோஷம் எழுப்பியிருக்கிறார்கள். இத்தகைய அரசியல் நாகரிகமற்ற கோஷங்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் எழுப்பப்பட்டிருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.

திமுக.வின் படுதோல்விக்கு என்ன காரணம்? தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது, வெற்றி பெற்ற பிறகு தனித்து ஆட்சியை அமைப்பது, தேர்தல் வெற்றிக்கு உதவிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்குதர மறுப்பது. இவ்விதம் 60 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட நியாயமற்ற அணுகுமுறையைத்தான் தவெக நிகழ்த்திய விசில் புரட்சி மூலம் முறியடித்துக் காட்டியிருக்கிறது. தவெகவின் விக்கிரவாண்டி முதல் கூட்டத்திலேயே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று அதன் தலைவர் விஜய் அவர்கள் பிரகடனம் செய்தார். அதை ஏற்ற தமிழக மக்கள், அமோக ஆதரவோடு தவெகவை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள்.

ஆட்சியில் பங்கு வழங்குகிற தவெக தலைவர் விஜய் அவர்களின் விரிந்த ஜனநாயக உணர்வை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுதான், திமுக கூட்டணியில் நீண்டகாலமாகப் புழுக்கதோடு இருந்த காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் தவெக வழங்கிய ஆட்சியில் பங்கேற்றுக்கொண்டு அமைச்சரவையில் இணைந்திருக்கிறார்கள். இது கடந்த 60 ஆண்டுகளில் தமிழக அரசியலில் நிகழாத அற்புதமாகும்.

காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் இல்லாமலேயே திமுக வெற்றி பெறும் என்று நினைத்திருந்தால் கூட்டணியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியிலும் கூட்டணியை ஒருங்கிணைப்பதில் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துகொண்ட முயற்சியை யாரும் மறக்க முடியாது.

1967 முதல் எந்தத் தேர்தலிலும் திமுகவோ, அதிமுகவோ கூட்டணி இல்லாமல் போட்டியிட்டதும் கிடையாது, வெற்றி பெற்றதும் கிடையாது. எனவே, கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பைப் பெயரளவில் ஏற்றுக்கொள்ளாமல், மனப்பூர்வமாகத் மதிப்பதோடு, நேற்று வரை கூட்டணியில் இருந்த கட்சிகளை வரம்புமீறி இழிவாக விமரிசிப்பதைத் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து இத்தகைய விமரிசனங்களை திமுக மேற்கொள்ளுமேயானால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேருமென்று எச்சரிக்க விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Congress Condemns DMK Resolution

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.