கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது
கோவை மாவட்டம் சூலூர் அருகே மே 21 அன்று 10 வயது சிறுமி காணாமல் போனார். தீவிர தேடுதலுக்குப் பிறகு அச்சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
சிறுமி மர்மமான முறையில் பலியான நிலையில் உடற்கூராய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட சிறுமியின் உடல் இன்று மதியத்திற்கு மேல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உடலைப் பெற்றுக்கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆம்புலன்ஸ் மூலம் தங்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதிக்கு உடலை எடுத்துச் சென்றனர்.
அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் இந்த வழக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Summary
Coimbatore Sexual Assault: Girl's Body Cremated in Her Native Village
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

செங்கம் அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து நகை பறிப்பு

பாலியல் வன்கொடுமை செய்து பெண் கழுத்தை அறுத்துக் கொலை

திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



