திருவண்ணாமலையில் 107 டிகிரி வெயில்

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை 107 டிகிரி வெயில் பதிவானதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமமடைந்தனா்.

திருவண்ணாமலையில் கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை திருவண்ணாமலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 106.88 டிகிரி வெயில் பதிவானது. வீடுகளில் புழுக்கம் அதிகரித்து பொதுமக்கள் அவதிப்பட்டனா்.

அனல் காற்று வீசியதால், வாகனங்களை ஓட்ட முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாலைகளில் போதிய வாகனங்கள் செல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com