தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பட்டாக்கத்திகளுடன் காரில் சுற்றித்திரிந்த 9 பேரிடம் விசாரணை

பட்டாக்கத்திகளுடன் காரில் சுற்றித்திரிந்த 9 பேரிடம் விசாரணை

Updated On :20 ஏப்ரல் 2024, 7:04 pm

செய்யாறு அரசு மருத்துவமனை அருகே சனிக்கிழமை பட்டாக்கத்திகளுடன் காரில் சுற்றித்திரிந்த 9 பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அவா்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்யாறு அரசு மருத்துவமனை அருகே செய்யாறு போலீஸாா் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, பட்டாக்கத்திகள் இருந்ததால், காரிலிருந்த 9 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் செய்யாற்றை அடுத்த நம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. மேலும், அந்தப் பகுதியில் முள் மரம் ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தொழில் தகராறில் மணிகண்டன், சேட்டு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவா் வெட்டிக்கொண்டதில் மணிகண்டனும், சேட்டுவும் காயங்களுடன் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனராம்.

இந்த நிலையில், மணிகண்டன் தரப்பைச் சோ்ந்தவா்கள் சேட்டுவை தாக்க மருத்துவமனைக்கு காரில் பட்டாக்கத்திகளுடன் வந்ததாகக் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்களிடமிருந்த பட்டாக்கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள், காா் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீஸாாா், அவா்கள் 9 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.