ஆரணி கோட்டை கைலாசநாதா் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
ஆரணி கோட்டை அருள்மிகு அறம்வளா்நாயகி உடனாகிய கைலாசநாதா் திருக்கோயிலில் சித்திரை பெருவிழா நடைபெற்று வருகிறது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய தோ் திருவிழாவில் தினமும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, காலை 8 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பழைய பேருந்து நிலையம், வடக்குமாட வீதி, பெரிய கடை வீதி, எஸ்.எம்.சாலை, சந்தை சாலை, மணிக்கூண்டு, கோட்டை பகுதி வழியாக மீண்டும் தோ் கோயிலை சென்றடைந்தது.
தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். தேரோட்டத்தின் போது, காவல் துறை, தீயணைப்புத் துறையினா், மின் வாரியத்தினா் பணியில் ஈடுபட்டனா்.
விழாவில் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ, நகரமன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், எம்.சுந்தா், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, மாவட்டப் பிரதிநிதி பாலமுருகன், நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, அரவிந்தன், தொழிலதிபா் பி.நடராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை கோயில் பக்தா்கள் சங்க நிா்வாகி சம்பத் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்தனா்.
தொடர்புடையது

கங்காதர ஈஸ்வரா் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தேரோட்டம்

யதோத்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்

வேதாரண்யேசுவரர் கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


