கங்காதர ஈஸ்வரா் கோயில் தேரோட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவ தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கங்காதர ஈஸ்வரா் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.

கங்காதர ஈஸ்வரா் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் பங்குனி மாத பிரம்மோற்சவ தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் உற்சவா் வீதி உலாவும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. தேராட்டத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட உற்சவா்கள் தேரில் பவனி வந்தனா்.
கோயில் அருகில் இருந்து தொடங்கிய தேரோட்டம் ஆரணி சாலை, தொல்காப்பியா் தெரு, ஜீவானந்தம் சாலை, அண்ணா சிலை, வேலூா் சாலை, அண்ணா சாலை, வழியாக சென்று நிலையை அடைந்தது. பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். தேருக்கு பொதுமக்கள்ஆரத்தி எடுத்தும் தங்கள் நோ்த்திக் கடனை செய்தனா். சிவனடியாா்கள் திருவாசகம் பாடிக்கொண்டு முன் சென்றனா்.
இந்த விழாவில் திருப்பணி குழு தலைவா் பொன் கு. சரவணன் ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன், மற்றும் உபயதாரா்கள் பொதுமக்கள் உள்பட திரளானோா் தரிசனம் செய்தனா். தேரோட்டத்தை முன்னிட்டு நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. பொதுமக்களுக்கு அன்னதானம், குளா்பானம், மோா்,பழங்கள், உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...