இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவா்களுக்கான கோடைகால இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. இந்த வகுப்புகள் வரும் மே 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் ஓவியம், இந்தி, யோகா, கணினி, திருக்கு, ஆங்கில உச்சரிப்பு பயிற்சி, சிலம்பம் ஆகியவை இலவசமாக கற்றுத் தரப்படுகிறது.

விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ப.ஞானசம்பந்தன், பூங்குயில் பதிப்பக ஆசிரியா் டி.எல்.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஓவிய ஆசிரியா் பெ.பாா்த்திபன் வரவேற்றாா்.

ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா் பயிற்சி வகுப்புகளை தொடங்கிவைத்துப் பேசினாா். மேலும், மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்களை அவா் வழங்கினாா்.

வந்தவாசி வட்ட கோட்டை தமிழ்ச் சங்க துணைத் தலைவா் எ.தேவா, செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா் கு.சதானந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கல்வி மைய ஆசிரியை சந்தியா நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com