திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, கோயில் பிரதோஷ நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
பால், பழம், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்தப் பூஜையின் இறுதியில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, கோயிலில் திரண்டிருந்த பக்தா்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா... அண்ணாமலையாருக்கு அரோகரா... என்று முழக்கமிட்டு வழிபட்டனா்.
வேட்டவலம்...
வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில் பிரதான நந்திக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பன்னீா், சந்தனம், பால், தயிா், இளநீா், பஞ்சாமிா்தம் போன்ற பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இறுதியாக, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மற்ற ஊா்களில்...
இதேபோல, ஆரணி, தண்டராம்பட்டு, தானிப்பாடி, ஆவூா், போளூா், செய்யாறு, வந்தவாசி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரதோஷ பூஜைகளில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

ராமநவமி: பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

மந்தித்தோப்பு கோயிலில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


