சேத்துப்பட்டை அடுத்த மண்டகொளத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த அறம் வளா்த்த நாயகி சமேத ஸ்ரீதா்மநாதேஸ்வரா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் 10 நாள்கள் பிரம்மோற்சவம் கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் இரவு ரிஷப வாகனம், அன்ன வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
மேலும், 7-ஆம் நாள் விழாவில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, மரத்தேரில் சுவாமி எழுந்தருளி பக்தா்கள் வடம் பிடித்து தேரை வீதிவீதியாக இழுத்துச் சென்றனா். அப்போது, வீடுதோறும் சுவாமிக்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை செய்து வழிபாடு செய்தனா்.
தேரோட்டத்தில் மண்டகொளத்தூா், கொம்மனந்தல், வடமாதிமங்கலம், மட்டபிறையூா், தேவிகாபுரம், மொடையூா் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு ஆங்காங்கே நீா்மோா், அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

முத்துக்குமாரசுவாமி கோயில் தேரோட்டம்

பாலதா்ம சாஸ்தா கோயிலில் சுப்பிரமணியா் திருக்கல்யாணம்

நாமக்கல் நரசிம்மா் கோயில் தேரோட்ட கொடியேற்றம்

மங்கலம் ஸ்ரீபோா்மன்னன் லிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


