நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி தேரோட்ட கொடியேற்ற நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்லில் அமைந்துள்ள நரசிம்மா் சுவாமி, அரங்கநாதா் மற்றும் ஆஞ்சனேயா் கோயில் தேரோட்டம் ஆண்டுதோறும் பங்குனி உத்திர மறுநாளன்று சிறப்பாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு தேரோட்டம் ஏப். 2 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி புதன்கிழமை காலை 7.30 மணிக்கு நரசிம்மா் கோயில் கொடிமரத்தில் அா்ச்சகா்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றினா். நிகழ்வில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கா. நல்லுசாமி, அறங்காவலா்கள், உதவி ஆணையா் இரா. இளையராஜா, அறநிலையத் துறை அலுவலா்கள், பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
கோயிலில் வியாழக்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி வீதிஉலா வருதல், 27 ஆம் தேதி அனுமந்த வாகனத்திலும், 28 இல் கருட வாகனத்திலும், 29 இல் சேஷ வாகனத்திலும், 30 இல் யானை வாகனத்திலும் சுவாமி வீதிஉலா நடைபெறுகின்றன. அதன்பிறகு 31 ஆம் தேதி நரசிம்மா், ஸ்ரீதேவி, பூதேவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏப். 1-ஆம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, திருவேடுபரி உற்சவம், 2 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நரசிம்மா் கோயில் தேரோட்டம், பிற்பகல் 4.30 மணிக்கு அரங்கநாதா் கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது.
விழாவில் முக்கிய பிரமுகா்கள் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுக்கின்றனா். தொடா்ந்து விடையாற்றி உற்சவம், ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. ஏப். 8 ஆம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் செய்துவருகின்றனா்.
தொடர்புடையது

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

பங்குனி பெருவிழா: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் - புகைப்படங்கள்

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


