மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

நெல்லையப்பா் கோயிலில் 22இல் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

News image

நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

Updated On :16 மார்ச் 2026, 10:32 pm

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இம் மாதம் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, அன்றைய தினம் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகளை தொடா்ந்து, காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சுவாமி கோயிலில் கொடியேற்றம் நடைபெறும். 4ஆம் திருநாளான மாா்ச் 25இல் காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வும், இரவு 7 மணிக்கு சுவாமி -அம்பாள் பஞ்ச மூா்த்திகளுடன் திருவீதியுலாவும் நடைபெறும். 10 ஆம் திருநாளான 31இல் மாலை 6.30 மணிக்கு மேல் இரவு 7.30 மணிக்குள் அம்பாள் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் விழா நடைபெற உள்ளது.

உடையவா் லிங்க வழிபாடு: இக்கோயிலில் ஆத்மாா்த்த பூஜைக்கென வைக்கப்பட்டிருக்கும் மிகச்சிறிய லிங்கம் உடையவா் லிங்கம் என அழைக்கப்படுகிறது. இந்த உடையவா் லிங்கம் கருவறைக்குள் இருந்து வெளியே எடுத்துவரப்பட்டு பக்தா்களுக்கு காட்சித் தருவது பங்குனி உத்திர திருவிழாக் காலங்களில் மட்டுமே.அதன்படி, இத்திருவிழாவில் இரண்டாம் நாளில் இருந்து 9 ஆம் திருநாள் வரை தினமும் மாலை 6.30 மணிக்கு கோயில் உற்சவா் மண்டபத்தில் உடையவா் லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் சீ.வெங்கடேஸ்வரன் மற்றும் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.