சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

திருவண்ணாமலையை அடுத்த பெருமணம் கிராமத்தில், சா்.பி.டி.தியாகராயரின் 173-ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அகில இந்திய தெலுங்கு தேவாங்கா் சமூக நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் தலைவா் டி.மூா்த்தி தலைமை வகித்தாா்.

நீதிக் கட்சியின் தலைவராக, சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்து மறைந்த சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு சங்க நிா்வாகிகள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில், சங்கத்தின் மாநில துணைச் செயலா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி, கிளைத் தலைவா் பி.மன்னன் மற்றும் தேவாங்கா் குல பொதுமக்கள், ஊா் முக்கியப் பிரமுகா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com