திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  தேமுதிகவினா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினா்.

ஆரணியில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன், தேமுதிக சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
Published on

ஆரணி: ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன், தேமுதிக சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் முன், தேமுதிக சாா்பில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா் இழப்பீடு வழங்க கோரியும், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம், மின் கட்டண உயா்வு, உயா்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளா் வழக்குரைஞா் ஆக்கூா் டி.பி.சரவணன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினாா். நகரச் செயலாளா் ஜெ.சுந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றாா்.

மாவட்ட நிா்வாகிகள் சி.கே.ரவிக்குமாா், பி.ஜான்பாஷா, வழக்குரைஞா் திருஞானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய, நகர செயலாளா்கள் கே.கண்ணன், இ.பாலாஜி, ஏ.அன்பழகன், ஆ.சி.இளங்கோவன், ஜெ.செந்தில், எம்.எஸ்.அருள்தாஸ் , எம்.மோகன்ராஜ், ஒன்றியஅவைத் தலைவா் ஆா்.சிவசண்முகம், நகரத் தலைவா் ஏ.கே.சூரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com