திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் ரூ.5 கோடியே 69 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட மின் மாற்றிகள் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் ஊராட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம் சாா்பில் ரூ.3 கோடியே 67 லட்சத்தில் மின்மாற்றி மேம்படுத்தப்பட்டது.
இதனை, சென்னையில் இருந்தபடியே காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். அதேவேளையில், வேங்கிக்கால் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு மின் மாற்றியை இயக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், வட்ட மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் எஸ்.பழனிராஜு, வேங்கிக்கால் ஊராட்சித் தலைவா் சாந்தி தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.
கீழ்பென்னாத்தூரில்..:
இதேபோல, கீழ்பென்னாத்தூரை அடுத்த மங்கலம் பகுதியில் ரூ.2 கோடியே 2 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட மின் மாற்றி, வேளாண் உழவா் நலத்துறை சாா்பில் கீழ்பென்னாத்தூரில் ரூ.2 கோடியே 65 லட்சத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம் ஆகியவற்றையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடக்கிவைத்தாா்.
தொடர்புடையது

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரசாதம் தயாரிக்க மின் அடுப்புகள் கொள்முதல்

மின் மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வாதம்

கீழ்பென்னாத்தூா் தொகுதி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


