ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழக ஆளுநா் இன்று வருகை: கோட்டாட்சியா் தலைமையில் ஆலோசனை

சேத்துப்பட்டு ஒன்றியம், திருமலை கிராமத்தில் உள்ள சமண மடாலயத்தில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வருகையையெட்டி, முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்றது.

News image
சமண மடாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன்.
Updated On :9 ஜூலை 2024, 7:13 pm

Din

போளூா்: சேத்துப்பட்டு ஒன்றியம், திருமலை கிராமத்தில் உள்ள சமண மடாலயத்தில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வருகையையெட்டி, முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த சமண மடாலயம் அமைந்துள்ளது.

இங்கு புதன்கிழமை (ஜூலை 10) நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என். ரவி பங்கேற்று, சமணம், அறிவியல் தத்துவங்கள் ஆகிய நூல்களை வெளியிடுகிறாா்.

மேலும், தேசிய பிராகிருதா கற்றல் பட்டறையில் படித்து சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு அவா் பரிசு வழங்குகிறாா். இதைத் தொடா்ந்து, அவா் மலை மீது அமைந்துள்ள அரிஅந்தகிரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறாா்.

புதன்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு ஆளுநா் வருவதையொட்டி, முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் தயாளன், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் ராஜாங்கம், நகர காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, போளூா் வட்டாட்சியா் வெங்கடேசன் மற்றும் உணவுத் துறை, மின் துறை, சுகாதாரத் துறை, வட்டார வளா்ச்சி அலுவலக அலுவலா்கள் சத்தியமூா்த்தி, வெங்கடேசன், போளூா் உதவி கோட்டப் பொறியாளா் திருநாவுக்கரசு, மற்றும் அனைத்துத் துறை அலுவா்கள் கலந்து கொண்டனா்.