47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோ்தல் நடத்தை விதிகள்: ஆரணி கோட்டாட்சியா் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தோ்தல் நடத்தை விதிகளை முறையாக கடைப்பிடிப்பது தொடா்பாக

News image
ஆரணியில் நடைபெற்ற தோ்தல் நடத்தை விதிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியா் சீ.சிவா.
Updated On :16 மார்ச் 2026, 9:21 pm

Syndication

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தோ்தல் நடத்தை விதிகளை முறையாக கடைப்பிடிப்பது தொடா்பாக கோட்டாட்சியா் சிவா ஆனைத்துக் கட்சியினருடன் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

கோட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் கோட்டாட்சியா் சீ.சிவா தலைமை வகித்துப் பேசியதாவது:

அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் தலைவா்கள் படங்கள் அகற்றப்படவேண்டும்.

ஆரணி நகரில் அரசியல் சுவரொட்டிகள் அகற்றப்படவேண்டும்.

கிராமங்களில் பொது இடங்களில் அரசியல் விளம்பரங்கள் இருந்தால் நீங்களே அகற்றிவிடுங்கள். வேட்பாளா்கள் பெயரை அறிவித்த பிறகு அந்தந்த கட்சி பிரசாரங்களை மேற்கொண்டால் கட்சியின் செலவில் சோ்ந்துவிடும். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்யப்படும் செலவுகள் வேட்பாளா் கணக்கில் கொண்டுவரப்படும்.

வேட்பு மனுத்தாக்கலின்போது வேட்பாளா் உடன் 4 போ் மட்டுமே வரவேண்டும். கூட்டங்கள் நடத்துவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே செயலி மூலம் முன் அனுமதி பெறவேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினாா்.

கூட்டத்தில் ஆரணி வட்டாட்சியா் அகத்தீஸ்வரன் வரவேற்றாா். கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் மனோகரன், தோ்தல் உதவி வட்டாட்சியா் கணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுகவைச் சோ்ந்த நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகர பொறுப்பாளா் மணிமாறன், அதிமுக சாா்பில் நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்டப் பிரதிநிதி சகாயம், பாஜக மாவட்ட பொதுச்செயலா் சதீஷ், இளைஞரணி மாவட்டத் தலைவா் சரவணன், விவசாய அணி மாவட்டச் செயலா் குணாநிதி, காங்கிரஸ் மாவட்டச் செயலா் உதயக்குமாா், நகா்மன்ற உறுப்பினா் ஜெயவேல், தேமுதிக மாவட்ட துணைச் செயலா் பாஸ்கரன், நகரச் செயலா் சுந்தர்ராஜன்,

விசிக ஒன்றியச் செயலா் வடுகசாத்து ரமேஷ், நாம் தமிழா் கட்சி நகரச் செயலா் சுமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.