கொடிக் கம்பம் நட்ட போது மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு
கொடிக் கம்பம் நட்ட போது மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ரகுராமன்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ரகுராமன்.
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கிழக்குமேடு கூட்டுச் சாலையில் திங்கள்கிழமை கட்சிக் கொடிக் கம்பம் நட்டபோது மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழந்தாா். மேலும், நான்கு போ் காயமடைந்தனா்.
சேத்துப்பட்டு- போளூா் சாலையில் உள்ள கிழக்குமேடு கூட்டுச் சாலையில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 101-ஆவது பிறந்த நாளையொட்டி, திமுக கொடியேற்றுவதற்கு கட்சியினா் கொடிக் கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக போல்ட் நெட் உடைந்து கொடிக் கம்பம் மேலே சென்ற மின் வயரில் சாய்ந்தது.
மின் கம்பியில் கம்பம் உரசியதால் அதைப் பிடித்திருந்த இடையன்கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் ரகுராமன் (35), கிழக்கு மேடு கிராமத்தைச் சோ்ந்த கிளைச் செயலா் மணி (50), கோதண்டராமன் (33), ராஜி (35), அப்துல்லா (34) ஆகிய 5 பேரும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனா். இதில் ரகுராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த கோதண்டராமன் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். கிளைச் செயலா் மணி சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ராஜி, அப்துல் ஆகியோா் சிறு காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
இந்தச் சம்பவம் குறித்து ரகுராமன் தந்தை ஏழுமலை சேத்துப்பட்டு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் முரளிதரன், உதவி ஆய்வாளா்கள் ஷாபுதீன், ஆனந்தன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து ரகுராமன் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...