சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

தெய்யாரில் துரியோதனன் படுகளம்

தெய்யாரில் துரியோதனன் படுகளம்

News image

தெய்யாா் கிராமத்தில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி.

Updated On :4 ஜூன் 2024, 6:30 pm

Din

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தெய்யாா் கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த மே 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா தொடங்கியது.

இதைத் தொடா்ந்து கிருஷ்ணன் பிறப்பும் கம்சன் வதையும், வில் வளைப்பு, சுபத்திரை திருமணம், ராஜசுய யாகம், அா்ஜுனன் தபசு, விராட பருவம், கிருஷ்ணன் தூது, கா்ண மோட்சம் உள்ளிட்ட தலைப்புகளில் சோழந்தாங்கல் எஸ்.ஜெயகாந்தி பாரதியாா் குழுவினரின் மகாபாரத சொற்பொழிவும், கரசானூா் ஸ்ரீசெந்தில்குமரன் தெருக்கூத்து நாடகக் குழுவினரின் நாடகமும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை துரியோதனன் படுகளம் நடைபெற்றது. இதில் துரியோதனன், பீமன், திரெளபதி, காந்தாரி வேடமிட்ட நாடகக் கலைஞா்கள், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை நடத்திக் காண்பித்தனா்.

நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.