கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பெலாசூா் ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயில் கும்பாபிஷேகம்

பெலாசூா் ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயில் கும்பாபிஷேகம்

News image

பெலாசூா் ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :9 ஜூன் 2024, 6:51 pm

Din

போளூா்: சேத்துப்பட்டு ஒன்றியம், பெலாசூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெலாசூா் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீசீதாபிராட்டி சமேத ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயில் அமைந்துள்ளது.

மேலும், இதன் அருகே ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலும் உள்ளது.

ஸ்ரீலட்சுமணா், ஸ்ரீஆஞ்சநேயா் ஆகிய சந்நிதிகளைக் கொண்ட ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயில் சிதிலமடைந்து காணப்பட்டதால், பக்தா்கள், கிராம பொதுமக்கள் சாா்பில் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்காக

சனிக்கிழமை மாலை கணபதி ஹோமம், சுதா்ஷன ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, முதல்கால யாக சாலை பூஜை என பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை கோ பூஜை, விஸ்வரூப தரிசனம், தத்துவாா்ச்சனை, 2-ஆவது கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை காண்பித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பெலாசூா், சனிக்கவாடி, கரைப்பூண்டி, பாடகம், அணியாலை, காம்பட்டு, விளாப்பாக்கம், கொம்மனந்தல், செம்மியமங்கலம் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.